Friday 21 September 2012

சூர்யா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

பார்ட்டி, டிஸ்கோதெ, டிரிங்ஸ்,சிகரெட் எந்தப் பழக்கமுகம் இல்லாதவர் சூர்யா.ஷுட்டிங் முடிந்தால் அப்பா, அம்மா,மனைவி என செட்டில் ஆவதையே விரும்புவார்.கேட்டால், ‘அப்பாவும் இப்படித்தானே இருந்தார் என்பார்!
முருக பக்தர் சூர்யா. எழுந்தவுடன் குளித்துவிடுபவர்.நெற்றியில் கொஞ்ச நேரமேனும் திருநீறு துலங்கும். சமீபத்தில் திருவண்ணாமலைக்குச் சென்று, செருப்பு போடாமல் கிரிவலம் வந்திருக்கிறார் !
காலையில் ஹெல்த் டிரிங்ஸ், கொஞ்சம் உலர்ந்த பழங்கள்,மதியம் மூன்று சிக்கன் பீஸ், சப்பாத்தி, வேகவைத்த காய்கறிகள், மாலை ஜுஸ், இரவு சப்பாத்தி, இது தான் அவருடைய மெனு. ஸ்வீட்டுக்கு எப்பவும் தடா !
ராம்கோபால் வர்மாவின் ஹிந்திப் படத்தில் நடிக்க விருப்பதால், ‘சிங்கம்’ ஷுட்டிங் முடிந்ததும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை ஹிந்தி டியூஷன் படிக்கிறார். வசனங்களைப் புரிந்து கொண்டு அவரே டப்பிங் பேச ஆசைப்பட்டுத் தான் இந்த ஏற்பாடாம் !
பொள்ளாச்சி பகுதிகளில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் விண்ட் மில்களுக்குச் சொந்தக்காரர் சூர்யா. தேசிய வங்கியில் வாங்கிய கடன் முடிந்து, விண்ட் மில் விரைவில் சொந்தமாகப் போகிறதாம் !
துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்த காரணத்தால், ஷுட்டிங்கில் அவருக்கான ஆடைகளை அவரே கட்டிங் செய்து டிசைன் செய்கிறார் !
அவரது புதுப் படம் வெளியாகும் போதெல்லாம், அவர் படித்த லயோலா கல்லூரியின் பேராசிரியர்களுக்கு ஸ்க்ரீன் செய்து அபிப்பிராயம் கேட்பார் !
சூர்யாவின் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் ஷங்கர். ஆனாலும் இவர்கள் இருவரின் படத்திலும் நடித்தது இல்லை சூர்யா !
30 வருடங்களுக்கு மேலாக சிவகுமார் குடும்பத்தின் டிரைவராகப் பணிபுரிந்து வரும் சண்முகத்தின் மீது சூர்யா, கார்த்தி, பிருந்தா மூவருக்கும் மிகுந்த மரியாதை, திருமணம் முடிந்தவுடன் சூர்யா, பிருந்தா ஆகியோர் தம்பதிகளாக அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் அளவுக்கு பாசம் காட்டுவார்கள்!
தங்கை பிருந்தா மீது சூர்யாவுக்கு அலாதி பாசம். வாரத்துக்கு ஒரு முறையேனும் பிருந்தாவை அவர் பார்த்துவிட வேண்டும். நாட்கள் கடந்தால் இவரே தன் குழந்தை தியாவைத் தூக்கிக் கொண்டு தங்கையைப் பார்க்க ஓடிவிடுவார் !
ஸ்கூலுக்கு அடிக்கடி சென்ற 12B பஸ்ஸில் இப்போது ஒரு ஜாலி டிரிப் அடிக்க வேண்டும் என்பது சூர்யாவின் நீண்ட நாள் ஆசை. ஆனால், ‘வேண்டாம்.....கூட்டம் சேர்ந்து எல்லாருக்கும் தொந்தரவாக இருக்கும் !’ என்று நண்பர்கள் அவரை அரெஸ்ட் செய்து வைத்திருக்கிறார்கள். ‘ஒரு நாள் உங்களுக்கெல்லாம் டேக்கா கொடுத்துவிட்டு, ஜாலி டிரிப் அடுத்தே தீருவேன் !’ என்று பந்தயம் கட்டியிருக்கிறார் சூர்யா.
10 வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் இயக்க வேண்டுமென்பது சூர்யாவின் கனவு. இப்போதே ரீ-ரிக்கார்டிங். கதை விவாதம், எடிட்டிங் எனப் பாடம் கற்றுக் கொண்டு இருக்கிறார்.


No comments:

Post a Comment