சூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு
நெருப்புக் கோளமாகும். சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும்.
அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு
சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப் போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது
இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள்
தொலைவில் உள்ளது. (ஒரு ஒளி ஆண்டு = 5,88,00,00,000 மைல்கள்). இந்த
அண்டத்தின் மையத்தைப் பற்றிக் கொண்டு வினாடிக்கு 250 கிலோமீட்டர்கள்
வேகத்தில் ஒரு முறை சுற்றி வரச் சூரியனுக்கு சுமார் 225 மில்லியன் ஆண்டுகள்
ஆகின்றது. இத்துடன் சூரியன் தனது அச்சைப் பற்றிக் கொண்டு ஒருமுறை சூழலத்
துருவத்தில் (at the Poles) 24 முதல் 25 நாட்களும்; மைத்தில் 34 முதல் 37
நாட்களும் ஆகின்றது.
சூரியனில் அணுவினை
சூரியனில் நடைபெறும் அணுவினையை மூன்று படிகளாகக் கருதலாம்.
படி 1. 1H 1Hfi 2H+e’+ நியூட்ரினோ
படி 2. 2H 1Hfi 3He+ ஃபோட்டான்
படி 3. 3He+ 3Hefi 4He+ 1H+ 1H+ ஃபோட்டான்
முதல் நிகழ்வில் இரண்டு புரோட்டான்கள்
(Proton) ஒன்றோடு ஒன்று மோதி ஒன்றுபடுவதால் ஒருவித ஹைட்ரஜன் (H) அணு
உருவாக்கப்படுகிறது. இத்துடன் ஒரு மிகச் சிறிய பாசிட்ரான் (Positron)
துகளும், நியூட்ரினோ (Neutrino) என்ற ஒரு நிறையற்ற துகளும் வெளியேறுகின்றன.
இரண்டாவது நிகழ்வில் இந்த ஹைட்ரஜன் மற்றொரு புரோட்டானுடன் மோதி
ஒன்றிணைவதால் ஹீலீயம் -3 (3He) என்ற அணு உருவாகின்றது. இத்துடன் ஃபோட்டான்
(Photon) ஆனது கதிர்வீச்சாக உமிழப்படுகின்றது. மூன்றாவது நிகழ்வில் இரண்டு
ஹீலியம் 3 அணுக்கள் மோதி ஒன்றிணைந்து ஹீலியம் – 4 என்ற (4He) அணு
உருவாகின்றது. இத்துடன் இரண்டு புரோட்டான் மற்றும் ஒரு ஃபோட்டான் ஆகியன
வெளிப்படுகின்றன.
இந்நிகழ்வுகளின் போது ஆற்றலானது
ஃபோட்டான்களாக வெளியேறுவதோடு மட்டுமின்றி, எடை குறைந்த தனிமமான
ஹைடிரஜனிலிருந்து எடை மிகுந்த ஹீலியம் தனிமம் உருவாக்கப்படுகிறது. அத்துடன்
துவகத்தில் இருந்த ஹைடிரஜன்களின் மொத்த நிறையைக் காட்டிலும் நிகழ்வின்
இறுதியில் பெறப்பட்ட தனிமங்களின் மொத்த நிறை குறைவாகும். அணுச்
சேர்க்கையின் (Fusion) போது ஒரு சிறு பகுதி நிறை (m) ஆற்றலாக (E)
மாற்றப்படுகிறது. சூரிய அணுச்சேர்க்கையின் போது, ஒவ்வொரு ஒரு கிலோ கிராம்
எடையுடைய ஹைட்ரஜன் வினையின் போதும் 0.007 கிலோகிராம் அளவு ஆற்றலாக
மாற்றப்படுகிறது.
இவ்வாற்றல் சூரியனுள் 4x1026 ஜூல்/வினாடி
அளவு உண்டாகின்றது. தன் சமநிலையை பராமரிக்க இதே அளவு ஆற்றலைச் சூரியன்
ஒவ்வொரு வினாடியும் கதிர்வீச்சாக வெளியிடுகின்றது. இதன் அளவு 400
டிரில்லின் டிரில்லியன் வாட்டுகள் ஆகும். (ஒரு டிரில்லியன் = 1012 ஆகும்).
ஒவ்வொரு வினாடியின் போதும் சூரியனானது 4 மில்லியன் டன்கள் ஹைடிரஜனை ஆற்றலாக
மாற்றி அண்ட வெளியில் கதிர் வீச்சாக உமிழ்கிறது. இவ்வாறு சூரியன் தனது
ஆற்றலை இழந்து கொண்டே வருவதால் அதன் எடை குறைந்து வருகிறது. இதுவரை
சூரியனின் வயது 500 கோடி ஆண்டுகள் எனக்கணக்கிட்டுள்ளனர். சூரியன் மேலும்
சுமார் 700 கோடி ஆண்டுகள் வாழ்தற்கான ஆற்றலைப் பெற்றுள்ளதாகவும் அறிவியலார்
கணக்கிட்டுள்ளனர்.
சூரியனது ஆற்றல் வெளியாகி எடை குறைந்து
கொண்டே வருவதால், சூரியனின் உட்பகுதியில் உட்குழிவு ஏற்பட்டு மேற்பரப்பில்
சுருக்கம் ஏற்படுகிறது. அதனால் உள்பகுதியை நோக்கி மேற்பரப்பு
நெருக்கப்படுகிறது. இதனால் சூரியனில் வெப்பம் அதிகரிக்கிறது. இவ்வாறாக
இன்னும் 100 கோடி ஆண்டுகளில் சூரியனின் வெப்பம் 50,000 டிகிரி ஃபாரன்ஹுட்
அளவை எட்டும். அப்போது சூரியனிலிருந்து வெளிர்நீல நிறமுள்ள கதிர்கள்
வெளியாகும். அடுத்து 300 கோடி ஆண்டுகளில் சூரியன் அதன் நடுத்தர வயதை
எட்டிப் பிடிக்கும். இந்நிலையில் சூரியனில் ஹைட்டிரஜன் மற்றும் ஹீலியம்
அணுக்கள் முழுக்கத் தீர்ந்த நிலையில் அது விரிவடையத் தொடங்கும். இவ்வாறு
விரிவடையும் போது சூரியனுள் புதன், வெள்ளி, புவி ஆகிய கோள்மீன்கள் அடங்கி
விடும்.
இந்நிலையில் சூரியன் சிவப்பு ராட்சசனாகிக்
(Red Giant) காணப்படும். உட்புற நெருக்கம் காரணமாகச் சூரியனில் அழுத்தம்
அதிகரிக்கும். இந்நிலையில் சிவப்பு நிறம் வெள்ளையாகிக் காணப்படும். மேலும்
50 கோடி வருடங்களில் சூரியனிலுள்ள எரி பொருள் முழுக்கத் தீர்ந்துபோன
நிலையில், வெள்ளைக் குள்ள விண்மீனாகச் சூரியன் மாறிவிடும். அடுத்து 30
இலட்சம் வருடங்களில் ஆற்றல் முழுவதையும் இழந்த சூரியன் கருப்பாக மாறி
விடும். இந்நிலையில் சிவப்பு ராட்சசனாக இருந்தபோது விழுங்காமல் விட்ட சில
துணைக் கோள்மீன்களுடன் கருப்புக்குள்ளனாகக் (Black Dwarf) காணப்படும்.
சூரியக் கரும்புள்ளி (Sun Spot)
சூரியனின் மேற்பரப்பில் சில இடங்களில் சில
வேளைகளில் பல கரும்புள்ளிகளைக் காணலாம். இக்கரும்புள்ளிகள் காந்த விசையின்
பாதிப்பினால் ஏற்பட்டவையாகும். இப்புள்ளிகள் சூரியனின் மேற்பரப்பிலுள்ள
ஏனைய பகுதிகளாகக் காட்டிலும் வெப்பம் குறைந்தவையாகக் காணப்படுகின்றன.
சூரியப் புள்ளிப் பகுதியைச் சுற்றியுள்ள வாயுக்கள் வெளியிடும். 5700 டிகிரி
கெல்வின் வெப்பத்தைக் காட்டிலும், சூரியப் புள்ளிப் பகுதியிலுள்ள
வாயுக்கள் வெளியிடும் வெப்பம் குறைவாக 4000 முதல் 4500 டிகிரி கெல்வின்
அளவில் இருப்பதுதான் அது கருமையாகக் காணப்படுவதற்குக் காரணமாகும்.
கரும்புள்ளிக்கு அருகிலுள்ள சூரிய வாயு காந்தப் புலத்தால்
கட்டுப்படுத்தப்படுகிறது. சூரியனிலுள்ள அயனிகள் காந்தப் புலத்தில்
தன்னிச்சையாகச் செல்லாமல் காந்தப் புல திசையிலேயே ஒருங்கிணைந்து
காணப்படும். இக்காரணத்தால் சூரியக் கரும்புள்ளியிலுள்ள அயனியாக்கமடைந்த
வாயுவும், ஏனைய சூரிய வளி மண்டலத்திலுள்ள வாயுவும் வேறுபட்ட வடிவங்களில்
காணப்படுகின்றன. அயனியாக்கமடைந்த வாயு பல ஆயிரம் கி.மீக்கு அனற் பிழம்பு
போன்று சுவாலைகளாகக் (Prominences) கிளம்பும். கரும்புள்ளிகள் தோன்றும் கால
அளவு சில மணி நேரங்களிலிருந்து பல வாரங்கள் வரையானதாகவும் காணப்படுகிறது.
நீண்ட கால அளவைப் பெற்றிருப்பின் புவியின் அயனி மண்டலத்தில் பாதிப்பை
ஏற்படுத்துகிறது. இதனால் வானொலித் தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படுகிறது.
புவியை நோக்கி வரும் மின்னூட்டப்பட்ட
துகள்களை மின்காந்தப் புலம் விலக்கித் தள்ளும். இதனால் அத்துகள்கள்
புவியின் இருதுருவங்களை நோக்கி ஈர்க்கப்படும். இவ்வாறு துருவங்களை நோக்கி
மின் துகள்கள் ஈர்க்கப்படுவதால் வடக்கு மற்றும் தெற்கு துருவம் நோக்கி
பேரொளி (அ) அறோறா பொறியாலிஸ் (Aurara Borealis) எனப்படும் விந்தைக்
காட்சிகள் அதிகமாகக் காணப்படும்.
சூரியனில் ஏற்டும் இந்த மாற்றம் 22
ஆண்டுகாலச் சுழற்சியை உடையது. இதுவும் இந்த 11 ஆண்டுகாலத் துணைச்
சுழற்சியைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இந்த 11 ஆண்டுத் துணைச் சுழற்சியில்
மிகவும் குறைவாகக் காணப்படும் காலத்திலிருந்து ஏறக்குறைய 4½
ஆண்டுகளுக்குப் பின் இக் கரும்புள்ளிகள் மிகவும் அதிகமாகவும், பின்னர் 6½
வருடங்களில் மீண்டும் குறைவாகவும் காணப்படும். மேலும் ஒவ்வொரு 11
ஆண்டுகாலத் துணைச் சுழற்சியின் போதும் சூரியனின் காந்தப் புலத்தின் திசை
முழுவதுமாக எதிராக மாறுபடுகிறது.
சூரியனிலிருந்து வெளிப்படும் தீ
நாக்குகளிலிருந்து துகள்கள் விண்வெளியில் எறியப்படுகின்றன. இது சூரியப்
புயல் எனப்படும் இப்புயல் புவியையும் கடந்து வெளிக் கோள் மீன்கள் வரையும்
பரவுகின்றது. புவிக்கு அருகில் இப்புயல் வினாடிக்கு 600 கிலோ மீட்டர்
வேகத்தில் கடக்கிறது. இந்த வாயுத் துகள்கள் மிகவும் நுண்மையாக இருப்பதால்
புவி எந்த வித வெப்பப் பாதிப்பையும் பெறுவதில்லை. விண்வெளிக் கலங்களைக்
கொண்டு திரட்டப்பட்ட தகவல்களிலிருந்து இப்புயல் சனிக் கோள் மீனின் சுற்றுப்
பாதை வரை காணப்படுவதாக தெரிகிறது.
2000-ஆம் ஆண்டு ஜூலை 14, வெள்ளிக் கிழமை
கிரீன்விச் நேரம் 10.24 மணிக்கு சூரியனின் பரப்பிலிருந்து மாபெரும் தீப்
பிழம்பு வெடித்து வெளிச்சிதறியது. இதனால் பல நூறு கோடிக்கணக்கான
பிளாஸ்மாக்களும் மின்னூட்டப்பட்ட துகள்களும் (Charged Particles)
அண்டவெளியில் வீசியெறியப்பட்டன. அவற்றில் சில மணிக்கு 48 இலட்சம் கிலோ
மீட்டர் வேகத்தில் புவியை நோக்கி வரத் தொடங்கின. இவை புவியின் மின்காந்தப்
புலத்தை அடுத்தநாள் தாக்கியது. இதனால் மின்காந்தப் புயல் ஏற்பட்டது.
பொதுவாக மின்னூட்டப்பட்ட துகள்கள் வந்து
தாக்காத வண்ணம் புவியின் மின்; காந்தப் புலம் பாதுகாப்பு அளித்து வருகிறது.
எனினும் சூரியனில் ஏற்படும் இது போன்ற ஆற்றல் மிக்க வெடிப்பால் வானொலி
சமிக்ஞை, தகவல் தொடர்பு பரிமாற்றங்கள், செயற்கைக்கோள் தொடர்பு,
மின்விநியோகம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன.
(நன்றி – மனோரமா இயர்புக்)
No comments:
Post a Comment