உலகத் தட்பவெப்பத்தைக் கட்டுப்படுத்தும் கடல்கள் (Oceans control the global weather)
வளைகுடா நீரோட்டம் மிக அதிக அளவில் வெப்ப நீரை கரீபியனிலிருந்து வடக்காக ஐரோப்பாவை வெதுவெதுப்பாக்குகின்றது என்று கண்டறிந்தார். இதன் மூலம் நீரோட்டம் தட்பவெப்ப நிலையையே கட்டுப்படுத்துகின்றது என்றும் கண்டறிந்தார். காற்றின் அளவு, வேகம், திசை இவை அனைத்தும் நீரோட்டங்களால் நிர்ணயிக்கப்படுவதும் கண்டறியப்பட்டது. பெஞ்சமின் குறித்த தகவல்கள் கொஞ்சம் என்றாலும், மேலும் மேலும் கடலாராய்ச்சி செய்ய இது ஊக்கமாக இருந்தது என்பதை மறுக்கவியலாது. 1814ல் ஜெர்மானிய விஞ்ஞானி Alexander von Humbolt 20 முறை குறுக்காகப் பயணம் செய்து தனது ஆராய்ச்சி முடிவுகளை அறிவிக்கும் வரை பெஞ்சமினின் தகவல்களே மிக விரிவானதாக இருந்தது. இவ்விரண்டு ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகளும் கடலாராய்ச்சியின் மிக முக்கியமான ஆராய்ச்சிகளாகக் கருதப்படுகின்றன.
வளைகுடா நீரோட்டம், உலகில் இப்போது ஓடும் மிசிசிபி, நைல், காங்கோ, அமேசான், வோல்கா, யாங்க்சீ போன்ற பெருநதிகளுடன் மற்ற அனைத்து நதிகளையும் இணைத்தாலும் கூட அதை விட அதிக அளவில் நீரைக் கொண்டிருக்கின்றது என்னும் தகவல் இந்நீரோட்டத்தின் பிரமாண்டத்தை உணர்த்தக் கூடும்
கண்டறிந்தவர்: பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
காலம்: 1770
அட்லாண்டிக் கடலில் இயங்கும்
வளைகுடா நீரோட்டம் உலகின் மிக முக்கியமான கடல் நீரோட்டமாகும். அது ஒரு
மிகப் பெரிய சூடாக்கும் இயந்திரம் எனலாம். கற்பனை செய்ய முடியாத அளவுக்கு
அதிகமான வெப்ப நீரை வடக்குக்குக் கொண்டு சென்று மொத்த ஐரோப்பாவையே
வெதுவெதுப்பாக்குகின்றது என்றால் அது உண்மை தான். இந்த வெப்ப நீரோடை
வணிகத்துக்கும், கடல்வழிப் பயணங்களுக்கும் மிகவும் முக்கியமான காரணங்களில்
ஒன்று என்று கூடக் கூறலாம். இறுதியில் இதுவே உலகின் தட்பவெப்ப நிலைக்கும்
காரணமாக இருக்கின்றது என்பது தான் ஆச்சரியப் படத்தக்க உண்மை.
இந்த உண்மையைக் கண்டறிந்தார்
அமெரிக்காவின் சிறந்த ராஜதந்திரி, விஞ்ஞானியுமான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்.
எவ்வாறு கண்டறிந்தார் என்று காண்போமா? அவரது ஆராய்ச்சியில் கடல்
நீரோட்டம், அதனால் கடலின் வெப்ப அளவில் ஏற்படும் மாற்றம், காற்றின் வேகம்
மற்றும் திசை மாற்றம், தட்பவெப்ப நிலை மாற்றம் ஆகியவை அடக்கம். நவீனக்
கடலாராய்ச்சியின் தந்தை என்றே பெஞ்சமினைத் தைரியமாக அழைக்கலாம்!
பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
அட்லாண்டிக் கடல் நீரோட்டத்தை எவ்வாறு கப்பலின் வேகத்தை அதிகரிப்பதற்குப்
பயன்படுத்தலாம் என்று கண்டறிவதற்காகவே தனது ஆராய்ச்சியை ஆரம்பித்தார்.
ஆனால் அவர் கண்டறிந்ததோ உலகுக்கே பயனளிக்கக் கூடிய தட்பவெப்ப நிலை
மாற்றத்துக்கான காரணத்தை என்பது ஆச்சரியம் தான்!
அட்லாண்டிக் கடலின் நீரோட்டம்
கப்பலோட்டிகளுக்குச் சாதகமானது என்பதைக் காலம் காலமாக உணர்ந்து அதைப்
பயன்படுத்திக் கொண்டனர் அக்கால மாலுமிகள். Columbus மற்றும் Ponce de Leon
போன்றவர்கள் ப்ளோரிடா கடற்கரைப் பகுதி, ப்ளோரிடா மற்றும் க்யூபாவுக்கு
இடைப்பட்ட பகுதிகளில் உணர்ந்ததாகக் குறித்திருக்கின்றார்கள். அடுத்தடுத்த
நூற்றாண்டுகளில் வட அட்லாண்டிக் கடல் முழுவதும் அதை உணர
ஆரம்பித்திருந்தனர். இருந்த போதிலும் அதை யாரும் அளக்கவில்லை,
மதிப்பிடவில்லை, படமாக ஆக்கவில்லை.
1769ல் போஸ்டனில் இருந்த ஆங்கில
அதிகாரிகள் லண்டனுக்கு ஒரு கடிதத்தில் பிரிட்டனின் பிரயாணிகளையும்
கடிதங்களையும் சுமந்து சென்ற சிறுவகைக் கப்பல்கள் அட்லாண்டிக் கடலைக்
கடக்கும் போது அமெரிக்கக் கப்பல்களைக் காட்டிலும் இரண்டு வாரங்கள்
தாமதமாகச் செல்வதாகக் குறைபட்டுக் கொண்டனர். அப்போது அமெரிக்கத் தூதுவராக
லண்டனில் தங்கியிருந்த பெஞ்சமின் காதுகளுக்கு இது சென்றடைந்த போது அவர்
இதை நம்பவில்லை!
ஏனெனில் பிரிட்டனின்
சிறுகப்பல்கள் அமெரிக்க வணிகக் கப்பல்களைக் காட்டிலும் அதிவேகமாகச் செல்லக்
கூடியவை. இது சாத்தியமா என்று அமெரிக்க வணிகக் கப்பல்களின் மாலுமிகளிடம்
விசாரித்தார் பெஞ்சமின். அந்தக் கப்பலின் மாலுமியோ, இது உண்மை என்றும்,
ரோட் தீவின் மாலுமிகள் அனைவருக்கும் வளைகுடா நீரோட்டமானது கப்பலின் வேகத்தை
மணிக்கு 3 மைல்கள் அதிகரிக்க வைப்பது தெரியும் என்றும், அது
நியூயார்க்கிலிருந்து நியூ இங்கிலாந்து வரை கிழக்கு முகமாக இருக்குமென்றும்
கூறினார். இதனால் அமெரிக்க மாலுமிகளுக்கு இவ்விடத்தை அடைந்ததும்
மேற்கிலிருந்து வரும் போது வடக்கிலோ தெற்கிலோ சற்று வளைந்து (நீரோட்டத்தை
எதிர்க்காமல்) செல்வார்கள் என்றும் கூறினார்!
பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் இதைச்
சரிபார்க்க படங்களைக் காணும் போது இது எங்கேயும் குறித்து வைக்கப்படவே
இல்லை என்பதை உணர்ந்தார்! அதன் பின்னர் பல மாலுமிகள்,
திமிங்கலம்/சுறாக்களை வேட்டையாடுபவர்களைப் பேட்டி கண்டார் பெஞ்சமின். சுறா
வேட்டையாடுபவர்களுக்கு இந்த நீரோட்டம் பற்றி அதிக அறிவு இருப்பதையும்
கண்டார்.
1770 வாக்கில் நீரோட்டம் குறித்த
விரிவான படங்களைத் தயாரித்தார் பெஞ்சமின். ஆனால் பிரிட்டிஷார் அவரது
கருத்துகளை ஏற்றுக் கொள்ளவில்லை. 1773ல் ஏற்பட்ட காலணி ஆதிக்கப்
பிரச்னைகளின் காரணமாகத் தனது கண்டுபிடிப்புகளை வெளியிடாமல் நிறுத்தி
வைத்தார் பெஞ்சமின்.
1783 க்குள் அட்லாண்டிக் கடலில்
எட்டு முறை குறுக்காகப் பயணம் செய்து பல இடங்களில் தட்பவெப்ப நிலையைக்
குறித்து வைத்துக் கொண்டார் பெஞ்சமின். அவரது கடைசிப் பயணத்தில்
ப்ரான்ஸிலிருந்து அமெரிக்கா செல்லும் வழியில் மாலுமியிடம், நீரோட்டத்தின்
ஓரத்திலேயே செல்லுமாறு பணித்தார் பெஞ்சமின். அது அவரது பயணத்தை மிகவும்
தாமதப்படுத்தியது! கப்பலின் ஒருபுறம் வெப்ப நீரோட்டம், மறுபுறம் குளிரான
கடல்நீர் ஆகிய இரண்டுக்கும் நடுவில் கப்பல் தத்தளித்ததைக் கண்கூடாகக்
கண்டார் பெஞ்சமின்! அப்போது 20 மற்றும் 40 பாத்தம் ஆழத்தில் வெப்ப அளவும்
குறித்து வைக்கப்பட்டது. இது தான் முதன் முதலில் நீரோட்டத்தின் ஆழத்தையும்
கண்டறிய நிகழ்ந்த முயற்சியாகும். இதன் மூலம் நீரோட்டத்தின் கன அளவும்
அறிய முடிந்தது.
இது தான் பெஞ்சமின் ஃப்ராங்க்ளினின் நீரோட்ட வரைபடமாகும். (நன்றி விக்கிபீடியா)வளைகுடா நீரோட்டம் மிக அதிக அளவில் வெப்ப நீரை கரீபியனிலிருந்து வடக்காக ஐரோப்பாவை வெதுவெதுப்பாக்குகின்றது என்று கண்டறிந்தார். இதன் மூலம் நீரோட்டம் தட்பவெப்ப நிலையையே கட்டுப்படுத்துகின்றது என்றும் கண்டறிந்தார். காற்றின் அளவு, வேகம், திசை இவை அனைத்தும் நீரோட்டங்களால் நிர்ணயிக்கப்படுவதும் கண்டறியப்பட்டது. பெஞ்சமின் குறித்த தகவல்கள் கொஞ்சம் என்றாலும், மேலும் மேலும் கடலாராய்ச்சி செய்ய இது ஊக்கமாக இருந்தது என்பதை மறுக்கவியலாது. 1814ல் ஜெர்மானிய விஞ்ஞானி Alexander von Humbolt 20 முறை குறுக்காகப் பயணம் செய்து தனது ஆராய்ச்சி முடிவுகளை அறிவிக்கும் வரை பெஞ்சமினின் தகவல்களே மிக விரிவானதாக இருந்தது. இவ்விரண்டு ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகளும் கடலாராய்ச்சியின் மிக முக்கியமான ஆராய்ச்சிகளாகக் கருதப்படுகின்றன.
வளைகுடா நீரோட்டம், உலகில் இப்போது ஓடும் மிசிசிபி, நைல், காங்கோ, அமேசான், வோல்கா, யாங்க்சீ போன்ற பெருநதிகளுடன் மற்ற அனைத்து நதிகளையும் இணைத்தாலும் கூட அதை விட அதிக அளவில் நீரைக் கொண்டிருக்கின்றது என்னும் தகவல் இந்நீரோட்டத்தின் பிரமாண்டத்தை உணர்த்தக் கூடும்
No comments:
Post a Comment